உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போ, தனது ரெனோ8டி 5ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.இந்த மாடலில், ஓப்போ நிறுவனம் தனது சொந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஸ்பிளே, கேமரா, பேட்டரி உள்ளிட்ட ஹார்டுவேரை மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா, 56 டிகிரி ஸ்கிரீன் கர்வ், 171 கிராம் எடை, 6.7 இன்ச் அமோல்டு ஸ்கிரீன் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.மேலும், ‘ஏஐ அடாப்டிவ் ஐ ப்ரொடெக்ஷன் சிஸ்டம்’ இந்த போனில் உள்ளதால் நீண்ட நேரம் ஸ்கிரீனை கண்டால் ஏற்படும் சோர்வை தடுப்பதுடன் கண்களைப் பாதுகாக்கும் என ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓப்போ, தனது ரெனோ8டி 5ஜி போனை என்கோ ஏர்3 இயர்பட்சுடன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்திய மதிப்பின்படி, ஓப்போ ரெனோ8டி 5ஜி ஸ்மார்ட் போன் ரூ.29,999-க்கும், என்கோ ஏர்3 இயர்பட்ஸ் ரூ.2,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பிளிப்கார்ட், ஓப்போ ஸ்டோர் மற்றும் முன்னணி ஸ்மார்ட்போன் கடைகளில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More