பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நிறைவடைந்து 9 ஆண்டுகள் ஆனதன் நினைவாக மராட்டியத்தின் அகோலா நகரில் பொது பேரணி ஒன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசி உள்ள மகாராஷ்டிர துணை முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், நம்முடைய அரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜா மட்டுமே. நமக்கு மற்றொரு அரசர் கிடையாது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அவுரங்கசீப் வழி வந்தவர்கள் அல்ல. அவுரங்கசீப் மற்றும் அவரது வழிதோன்றல்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர்.இந்த நாட்டில் உள்ள, தேசிய கருத்துகளை கொண்டுள்ள ஒரு முஸ்லிம் ஒருபோதும் அவுரங்கசீப்பை ஏற்று கொள்வதில்லை. அவர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவை மட்டுமே மதிப்பார் என கூறியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று...
Read More