Mnadu News

இந்தியாவில் சற்று தனிந்த கொரோனா பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை இந்தியாவில் 656 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,67, 967 ஆக உயர்ந்துள்ளது.

அதே போல, கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,034- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,30,380- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30, 553ஆக உயர்ந்தது. இந்தியாவில் நேற்று மட்டும் 1,03,328 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends