Mnadu News

இந்தியாவில் தான் உலகிலேயே 2வது அதிக நீளமான சாலைகள்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பெருமிதம்.

மோடி அரசு பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா ஏராளமான சாதனைகளை செய்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவில் தான், உலகின், 2வது அதிக நீளமான சாலைகள் உள்ளது.இந்தியாவில் மொத்தம் 64 லட்சம் கிலோ மீட்டர் சாலை உள்ளது. சுங்கச்சாவடிகள் மூலம் வரும் வருவாயை 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.பாஸ்டேக்ஸ் மூலம் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் 47 வினாடிகளாக குறைந்துள்ளது. இதனை 30 வினாடிகளாக குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். என்று கூறி உள்ளார்.

Share this post with your friends