வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில், 17வது பட்டமளிப்பு விழா நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர்; ரவி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இதில் மொத்தம், ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து 275 மாணவ-, மாணவியர் பட்டம் பெற்றனர். 564 மாணவ, மாணவியருக்கு மட்டும் ஆளுநர்; கையால் பட்டம் வழங்கப்பட்டது. மீதமுள்ள ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 711 மாணவ, மாணவியருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த நிகழ்ச்சியில், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பேசியுள்ள மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங், பட்டங்களை பெற்றுள்ள மாணவர்கள் தொழில் முனைவர்களாக மாறினால் தங்களின் வாழ்க்கை பிரகாசிக்கும்.அதே நேரம், மத்திய அரசு பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.அNது வேளையில், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களை நம்பியுள்ளது. இந்தியா மற்ற நாடுகளை விட சுய தொழில் துவங்குவதில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில், 61 வகையான தொழில்களுக்கு, 132 நாடுகள், இந்தியாவில் முதலீடு செய்துள்ளன என்று பேசியுள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More