இந்தியா- மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது.இதையடுத்து, பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் எடுத்த இங்கிலாந்தின் பிபிசி செய்தி நிறுவனம் இந்தியாவில் செயல்பட தடை செய்ய வேண்டுமெனவும், இந்த ஆவணப்படத்திற்கு பின்னால் சதி உள்ளதா? என கண்டறிய என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இந்து சேனா என்ற அமைப்பின் தலைவர் விஷ்ணு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு ஆவணப்படம் நாட்டை எப்படி பாதிக்கும்? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு தடை விதிக்கவேண்டுமென தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்துவைத்தது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More