அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்த நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.மோடியை சந்தித்த பிறகு பேசிய கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை,இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல் நிதிக்காக கூகுள் நிறுவனம் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது. இதனை மோடியிடம் தெரிவித்து உள்ளேன். குஜராத்தில், சர்வதேச பின்டெக் செயல்பாட்டு மையம் நிறுவப்படும். என்று கூறினார்.மோடியை, அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஆண்டி ஜெஸ்ஸி சந்தித்தது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ,இந்தியாவில் கூடுதலாக 15 பில்லியன் டாலர் அடுத்த 7 ஆண்டுகளில் முதலீடு செய்யப்படும்.அதோடு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 13 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. கூறப்பட்டு உள்ளது.,மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில,; செயற்கை நுண்ணறிவு முதல், இந்தியர்களின் வாழ்க்கை மேம்படுத்துவது வரையிலான விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியும், சிஇஓ சத்ய நாதெல்லாவும் ஆலோசனை நடத்தினர்.இந்திய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. இதன் மூலம் இந்திய மற்றும் சர்வதேச அளவில் உள்ள சந்தைகளில் மாற்றம் ஏற்படும். என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More