இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார். வைக்கம் நூற்றாண்டு விழாவில் உரையாற்றியுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,உடல் வேறு என்றாலும்,எனக்கும் பினராயி விஜயனுக்கும் சிந்தனை ஒன்று தான்.தமிழ்நாடு சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையிலும்,இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்துள்ளேன். வைக்கம் போராட்டம் என்பது கேரளாவின் சமூக நீதி வரலாற்றில் மட்டுமின்றி,தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம். இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம். மஹர் போராட்டத்தை நடத்துவதற்கு வைக்கம் போராட்டம் தான் தூண்டுகோலாக அமைந்தது என்று அண்ணல் அம்பேத்கர் பிற்காலத்தில் குறிப்பிட்டுள்ளார். சுயமரியாதை, சமூகநீதி போராட்டத்தின் துவக்கமான வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் என்று பேசினார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More