Mnadu News

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் பால் உற்பத்தி 10 மடங்காக பெருகி உள்ளது: மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு.

குஜராத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார். இதற்காக குஜராத்துக்கு வருகை தந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் காந்திநகருக்கு சென்று 49-வது பால் பண்ணை ஆலையின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, 1970-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் மக்கள் தொகை 4 மடங்கு அதிகரித்து உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், நமது பால் பண்ணை பிரிவால் பால் உற்பத்தியானது 10 மடங்காக பெருகி உள்ளது. நமது பால் பதப்படுத்தும் திறன் நாளொன்றுக்கு 12 கோடியே 60 லட்சம் லிட்டர் ஆகும். இது உலக அளவில் அதிகம். நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் பால் பண்ணை பிரிவு செயலாற்றி உள்ளது. பால் பண்ணை நிறுவனம் பெரிய அளவில் பங்காற்றி உள்ளதுடன், ஏழை விவசாயிகள் மற்றும் பெண்கள் சுயசார்புடையவர்களாக உருமாறவும் உதவி செய்து உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் பால் பண்ணை பிரிவானது ஒரு முக்கிய அம்சம் வகிப்பதுடன், ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலான வருவாய்க்கு பங்காற்றி உள்ளது. இந்த பால் பண்ணை அமைப்புடன் 45 கோடி மக்கள் தொடர்பில் உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல்...

Read More