கொல்கத்தாவில் நடைபெற்ற சிஐஐ வணிக மாநாட்டின்போது, இந்தியா, தாய்லாந்து, மியான்மர் இடையே முத்தரப்பு தேசிய நெடுஞ்சாலை அமைப்பது குறித்து பேசப்பட்டு, 2 ஆயிரத்து 800 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி ஒப்பந்தமானது.இதில் சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சாலை இந்தியா மற்றும் மியான்மரிலும், 300 கிலோ மீட்டர் சாலை தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கிலும் அமையவிருக்கிறது.முதற்கட்டமாக தாய்லாந்தில் சாலை அமைக்கம் பணி நிறைவுபெற்று, அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. எனவே, இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் கொல்கத்தாவிலிருந்து மியான்மர் வழியாக தாய்லாந்து செல்ல சாலை வசதி வந்துவிடும். இதனால், நாட்டின் வணிக ரீதியான வாய்ப்புகள் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த திட்டம் நிறைவு பெற்றால், சாலை வழியாகவே இந்திய மக்கள் தாய்லாந்துக்குச் செல்லும் வசதி ஏற்பட்டுவிடும்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More