பிரான்ஸ் நாட்டின் ‘டசால்ட்’ என்ற நிறுவனத்தில் 56 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016-ல் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. கடந்த 2020 ஜூலையில் முதற்கட்டமாக 10 விமானங்கள் இந்தியா வந்தன. அவை, இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன. அடுத்து பல கட்டங்களாக ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுவரை மொத்தம் உள்ள 36 போர் விமானங்களில் 35 இந்தியாவிற்கு வந்துள்ளன. 36வது மற்றும் கடைசி ரபேல் விமானம் இன்று இந்தியா வந்து சேர்ந்தது. இதனை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட விமானங்கள் ரபேல் விமானங்கள் RB குறியீட்டுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் RB என்பது இந்திய விமானப்படையின் துணைத் தலைவர், மற்றும் முன்னாள் இந்திய விமானப்படை தலைமை ஏர் சீப் மார்ஷல் ஆர்.கே.எஸ். பதவுரியாவின் பெயரை குறிக்கிறது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More