Mnadu News

இந்தியா வளரும்போது உலகமும் வளரும்: அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை.

அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.அங்கு,அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி உள்ள பிரதமர்,”அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது என்பது மிகப்பெரிய கவுரவம். அதை இருமுறை பெறுவது என்பது தனிச்சிறப்பான கவுரவம். இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு ஜனநாயக நெறிகளால் கட்டமைக்கப்பட்டது. இரு நாட்டு அரசியல் சாசனமும் ‘மக்களாகிய நாம்’ என்ற வார்த்தைகளோடுத்தான் தொடங்குகின்றன. இரு நாடுகளும் அதன் பன்முகத்தன்மையில் பெருமிதம் கொள்கின்றன. இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பயணிப்பது உலக நன்மைக்கும், சர்வதேச அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் வித்திடும்.கடந்த 7 ஆண்டுகளில் உலகில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் தனது உறவை ஆழப்படுத்துவதில் உறுதியுடன் முன்னேறியுள்ளன. நான் முதன்முதலில் அமெரிக்கா வந்தபோது இந்தியா உலகின் 10-வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. ஆனால் இப்போது 5-வது பொருளாதார வல்லரசாக உள்ளது. நிச்சயமாக விரைவில் உலகில் 3-வது பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருவெடுக்கும். இந்தியா வளரும்போது இந்த ஒட்டுமொத்த உலகமும் வளரும். என்று பேசியுள்ளார்.

Share this post with your friends