சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலி உலகம் முழுவதும் அதிக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு சீனாவுடனான கல்வான் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி தரும் விதமாக மத்திய அரசு டிக்டாக் செயலியை தடை செய்தது. இதனால் இந்தியப் பயனர்கள் டிக்டாக் செயலியைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. எனினும் இந்தியப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தனர்.இந்நிலையில் டிக்டாக் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 40 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் வழங்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதார மந்தநிலை, தடை உத்தரவு உள்ளிட்ட காரணங்களால் இந்த பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More