Mnadu News

இந்திய எதிர்ப்பு தளமாக இலங்கையை பயன்படுத்த மாட்டோம்: இலங்கை அதிபர் திட்டவட்டம்.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரான்ஸ் அரசு ஊடகமான ‘பிரான்ஸ் 24’ செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்,இலங்கை எப்போதும் நடுநிலை நாடாகவே திகழும். இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு இலங்கை தளமாக பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம்.,கடந்த ஆயிரத்து 500 ஆண்டுகளாக சீனாவுடன் இலங்கைக்கு தொடர்பு உள்ளது. தற்போது வரை சீனாவின் ராணுவ படைத்தளம் ஏதும் இலங்கையில் அமையவில்லை. அதேபோல், சீனாவுடன் எவ்விதமான ராணுவ ஒப்பந்தத்திலும் சீனா ஈடுபடவில்லை. அத்தகைய ஒப்பந்தத்தில் ஈடுபடவும் சீனா விரும்புவதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

Share this post with your friends