Mnadu News

இந்திய – சீன உறவு சீராக இல்லை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு.

கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நிறைவடைந்த பிறகு,சீன வெளியுறவு அமைச்சர் கின் காங், ஜெய்சங்கருடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அந்நாடு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அதில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி நிலையானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், “பிரச்சினை அது அல்ல. எல்லையில் இரு நாடுகளும் படை விலக்கலை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில், இந்திய – சீன உறவு சீராக இல்லை. அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகள் உள்ளபோது உறவு சீராக இருக்க முடியாது” என பதிலளித்தார்.

Share this post with your friends

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...

Read More