தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் 42 ஆம் ஆண்டு விழா கல்லூரி முதல்வர் பால் வில்சன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய நடிகர் கமலஹாசன், கிறிஸ்தவ கல்லூரி விழாவில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன் அறிவுரை கூற வரவில்லை. அனுபவத்தை தெரிவிக்க வந்துள்ளேன.; நமது இந்திய மக்களின் சராசரி வயது 29 ஆனால் பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் சராசரி வயது 54 இதனை கலைய வேண்டும.; மாணவர்கள் வாக்களிக்க வர வேண்டும். அரசியல் உங்களை வழிநடத்தக் கூடாது. நீங்கள் அரசியலை வழி நடத்த வேண்டும். 100 சதவிதம் மாணவர்கள் வாக்களித்தால் அவர்களை நான் தோளில் தூக்குவேன். ஓட்டு எனக்கு போடுங்க என கேட்க வரவில்லை. கண்ணாடியை பார்க்க வேண்டும் உங்களை நீங்கள் நேசியுங்கள் உங்கள் குணாதிசயங்களை நேசியுங்கள் என்றார்.அன்னையின் மடியில் தாலாட்டு கேட்டபோது கலை எனக்கு அவசியமானது. கலையும் காதலும் அவசியம். தோல்வி சோதனை வரும் என பயம் என்றால் சிறிது நேரம் தூங்கி விடுவேன். போருக்கு செல்வதற்கு முன்பு தூங்கி அதன் பிறகு கிளம்பி செல்வேன்.மொழி புரிந்து விட்டால் மற்ற மொழிகளையும் புரிந்து கொள்ளலாம். சினிமாவில் இயக்குனராகவே பணியாற்ற வந்தேன் அதனை மடை மாற்றி விட்டவர் இயக்குநர் கே பாலசந்தர். அறிவுரையை கேட்டதால் பல நல்லா இயக்குனரிடம் கேட்டதால் தற்போது இங்கு வந்துள்ளேன். எனக்கு சினிமாவுக்கு அடுத்தது அரசியல் நன்றாக தெரிந்து இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். நான் கிறிஸ்தவ கல்லூரியில் பேஷன் டிசைனிங் ஸ்டூடியோ திறந்தேன் அதற்கு எனக்கு அருகில் இருக்கிறது. நான் காதி உடை அணிகிறேன் என்றார. மாணவர்கள் மாணவிகள் வேண்டுகோளுக்கிணங்க அன்பே சிவம் பாடலை அவர் பாடினார்.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More