அமெரிக்காவிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க துணை அதிபரும்;, தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியின் போது பேசிய அவர்,இந்தியா எனது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி. இந்தியாவில் உள்ள வரலாறு மற்றும் போதனைகள் எனக்குள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.அவை நிச்சயமாக முழு உலகத்தையும் வடிவமைத்துள்ளன. என்னையும் என் சகோதரி மாயாவையும் சிறு வயதில் எங்களது தாய் ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு அழைத்து செல்வார். மெட்ராசில் இருந்த தாத்தா-பாட்டியை பார்க்க செல்வோம். எனது வாழ்க்கையில் மிகவும் முக்கிய நபர்களில் என் தாத்தா ஒருவர். எனது தாத்தா, காலை வேளையில் தனது நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொள்வார். அப்போது நான் அவரது கையை பிடித்து கொண்டு அவர்கள் பேசுவதை கவனமாக கேட்பேன். சுதந்திர போராட்ட வீரர்கள், இந்தியாவின் சுதந்திரம் பற்றி தெரிந்து கொண்டேன். ஊழலை எதிர்த்து போராடுவதன் முக்கியத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான முக்கியத்துவம் பற்றி அவர்கள் பேசியது எனக்கு நினைவு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
நியூயார்க்கில் இந்து கோயில் மீது தாக்குதல்
அமெரிக்காவின் நியூயார்க்கில் ராபின்ஸ்வில்லி நகரில் சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. உலகின் 2வது...
Read More