இந்தோனேசியாவின் வடக்கு ஜகார்த்தாவில் அரசுக்கு சொந்தமான எரிபொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு நேற்று இரவு 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் எரிவாயு கிடங்கு அருகே வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், 260 தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 6 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 17 பேர் பலியாகினர். மேலும் 51 பேர் காயமடைந்தனர். எட்டு பேர் காணாமல் போயுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு இந்தோனேசிய தலைநகரில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் வசித்த 1,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More