Mnadu News

இந்த ஊர்வலத்தின் மாப்பிள்ளை யார்?’: பாட்னா கூட்டத்தை விமர்சித்த பாஜக முன்னாள் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேராத தலைவர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்காக, பல மாநில முதல் அமைச்சர்;கள் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தினர்.இந்தநிலையில் இந்தக்கூட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், பீகார் மாநில பாஜகவைச் சேர்ந்த ரவி சங்கர் பிரசாத், “நிதிஷ் குமார், பாட்னாவில் வரும் 2024-ஆம் ஆண்டு தேர்தலுக்காக திருமண ஊர்வலம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இந்த ஊர்வலத்தின் மாப்பிள்ளை அதாவது பிரதமர் வேட்பாளர் யார்?. அங்கிருப்பவர்கள் அனைவரும் தங்களை பிரதமர் வேட்பாளராகவே கருதுகின்றனர்” என்று கூறியுள்ளார்.

Share this post with your friends