Mnadu News

இன்டிகோ விமான நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர் பாராட்டு.

அரியானா மாநிலம் குர்கானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் விமான நிறுவனமான இன்டிகோ, விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடம் 500 ஏ320 ரக விமானங்களை வாங்குவற்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா ,இண்டிகோ நிறுவனம் 500 ஏர்பஸ் ஏ320 குடும்ப விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இது இந்தியாவின் மற்றொரு சாதனை ஆகும். இது இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் வளர்ச்சியை காட்டுக்கிறது.சிவில் விமானப் போக்குவரத்தில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலரும் புதிய வளர்ச்சியின் அடிப்படையில் வருமானத்தை ஈட்டுகிறது. எனது அனுபவத்தில் இதுவரை யாரும் இவ்வளவு பெரிய விமானம் வாங்கும் ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்ததில்லை. இந்த ஒப்பந்தம் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க செய்யும். என்று கூறி உள்ளார்.

Share this post with your friends