மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எரிசக்தி திறன் பணியகத்தின் தரவுகளின்படி, 2015-16 முதல் 2022-23 வரையிலான எட்டு ஆண்டுகளில், மிகவும் திறமையான, மாறும் வேகம் கொண்ட இன்வெர்ட்டர் ஏசி சந்தை பங்கு 1 சதவீதத்திலிருந்து 77 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நிலையான ஏசி-யின் சந்தை பங்கு 99 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாக குறைந்துள்ளது.ஏசிகளுக்கான ஒட்டுமொத்த சந்தை 2015ஆம் ஆண்டில் 47 லட்சத்திலிருந்து இருந்து 2020-21ஆம் ஆண்டில் 66 லட்சம் யூனிட்டுகளை எட்டியுள்ளது.ஸ்பிலிட் ஏசிகளுக்கு, ஒட்டுமொத்த ஆற்றல் திறன் மேம்பாடு 1 நட்சத்திரத்திற்கு 43 சதவீதமாகவும், 5-நட்சத்திர நிலைக்கு 61 சதவீதமாகவும் உள்ளது. மறுபுறம், விண்டோ ஏசிகளுக்கான ஒட்டுமொத்த ஆற்றல் திறன் மேம்பாடு 1-ஸ்டாருக்கு 17 சதவீதமும், 5-ஸ்டார் நிலைக்கு 13 சதவீதமாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உபகரண கூட்டுத் தயாரிப்பு: இந்தியா-அமெரிக்கா ஒப்புதல்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டின் ஐஐஐ,...
Read More