நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கழக அமைப்புச் செயலாளர் செந்தில் முருகன். பின்னர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெற்றார். இந்நிலையில் கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக சற்று நேரத்துக்கு முன்பு ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தனது ஆதரவாளர்களுடன் நேரில் சந்தித்த செந்தில் முருகன் அதிமுகவில் இணைந்து கொண்டார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More