Mnadu News

இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்.

தமிழக சட்டப் பேரவையின் 2 ஆம் நாள் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதும் பேரவையை நேற்று புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி அவையில் ஓ.பன்னீர் செல்வம் அருகே அமர்ந்தார். பின்னர் ,சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்கியதுமே இருக்கை தொடர்பாக முடிவெடுக்கக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். முதலில் மக்கள் பிரச்சினை குறித்து பேச அனுமதியுங்கள் பிறகு நேரம் தருகிறேன் உங்கள் கேள்வியை எழுப்புங்கள் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் பேரவைத் தலைவர் அப்பாவு கேட்டு கொண்டார். கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கிறேன். பேரவையின் மாண்பை குலைக்க அனுமதிக்க மாட்டேன். உங்கள் நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என சபாநாயகர் கூறினார்.
உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். தீர்ப்பு வந்த உடன் அ.தி.மு.க. விவகாரம் குறித்த முடிவை சொல்கிறேன என்றார்.அதைத் தொடர்ந்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பேரவைத் தலைவர் இருக்கை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இருக்கைக்கு செல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.”கலகம் செய்யும் நோக்கில் வந்துள்ளீர்களா? ஒரு மணி நேரம் நடக்கும் கேள்வி நேரத்தில் இடையூறு செய்யக்கூடாது. எதிர்க்கட்சி தலைவர் விதியை மீறுகிறார்;இருக்கைக்கு செல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை விடுத்தார். இந்தி எதிர்ப்பு தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றபட உள்ளது என்பதை தெரிந்து கொண்டு யாருக்கோ பயந்து இவ்வாறுச் செயல்படுகிறீர்கள,; ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுவதால் பழனிசாமி தரப்பு அச்சமடைந்து உள்ளீர்கள். மக்கள் பிரச்சினையை பேச மறுக்கிறீர்கள். நீங்கள் திட்டமிட்டே கலகம் செய்ய நினைத்து வநதுள்ளீர்கள். எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை சட்டசபையிலிருந்து வெளியேற்ற அவை காவலர்களுக்கு உத்தரவு பிறபித்தார். இதை தொடர்ந்து சபை காவலர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை சட்டசபையிலிருந்து வெளியேற்றினர். சிலர் அவைக்காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.

Share this post with your friends