Mnadu News

இமாசல் அமைச்சரவை விரைவில் அமைக்கப்படும்: முதலமைச்சர் தகவல்.

இமாசலில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. மாநிலத்தின் 15-ஆவது முதல் அமைச்சராக நான்கு முறை காங்கிரஸ் எம்எல்ஏ-வான 58 வயதான சுக்விந்தர் சிங் சுக்கு நேற்று பதவியேற்றார். சிம்லாவில் நடைபெற்ற விழாவில் அவருக்கு மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
மாநிலத்தின் துணை முதல் அமைச்சராக 60 வயதான முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்றுக் கொண்டார். ஆவர் கடந்த சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இமாசலின் முதல் துணை முதல் அமைச்சர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். விழாவின்போது வேறு யாரும் அமைச்சராகப் பொறுப்பேற்கவில்லை. மாநில அமைச்சரவையில் முதல அமைச்சருடன்; சேர்த்து 12 பேர் வரை இடம்பெறலாம். அமைச்சரவையில் இடம்பெறவுள்ள நபர்கள் குறித்த பேச்சுவார்த்தை நிறைவடைந்த பிறகு அவர்கள் பொறுப்பேற்பார்கள் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இமாசல் முதல் அமைச்சர்; சுக்விந்தத் சிங் சுக்கு சிம்லாவில் உள்ள மாநில சிவில் செயலகத்தில் அலுவலகப் பொறுப்பை இன்று ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, மாநிலத்தின் முதல் அமைச்சராக இன்று நான் பொறுப்பேற்கிறேன், அனைத்து எம்எல்ஏக்கள், துணை முதல் அமைச்சர் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மாநிலத்தின் நலனுக்காக பாடுபடுவார்கள். காங்கிரஸ் மேலிடத்தின் வழிகாட்டுதலின்படி அமைச்சரவை விரைவில் அமைக்கப்படும் என்றார்.

Share this post with your friends