இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் மண்டி – குலு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர்வாசிகள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்டி மாவட்டத்தின் ஆட் அருகில் உள்ள கோடிநாலாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் சாலைகள் மூடப்பட்டன. இதே போல் பாகிபுல் பகுதியில் உள்ள ப்ரஷார் ஏரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் மண்டி-பாகிபுல் சாலையில் பாகி பாலம் அருகே 200 பேர் சிக்கியுள்ளனர்.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று...
Read More