தெஹ்ரீன்-ஏ-இன்சாஃப் அதாவது பிடிஐ கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கான், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் கடந்தாண்டு தோல்வியடைந்து ஆட்சியை இழந்தார்.அதன்பிறகு, பயங்கரவாதம், மதநிந்தனை, கொலை, வன்முறையில் ஈடுபட்டது, வன்முறையைத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக சுமார் 140-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இஸ்லாமாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்காக இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்துக்கு வந்தார்.அப்போது 53 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனது அறக்கட்டளைக்கு மாற்றிய புகார் தொடர்பான வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து, பல்வேறு மாகாணங்களில் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.அதைத்தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும்...
Read More