2009 ஈரம் என்னும் சூப்பர் ஹிட் திரில்லர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர் இயக்குநர் அறிவழகன். இவர் ஷங்கரின் பட்டறையில் இருந்து உருவாகியவர்.
ஈரம் படம் வெளியாகும் நேரத்தில் பல அதே ஃபார்முலா கொண்ட மசாலா படங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அந்த நேரத்தில் தமது முதலாவது படத்திலேயே சிறந்த சம்பவத்தை செய்தார் அறிவழகன்.
தொடர்ந்து வல்லினம், குற்றம் 23, ஆறாது சினம், பார்டர் என அடுத்தடுத்து புது மாதிரி படங்களை கொடுத்து வருகிறார். அருண் விஜய்யின் திரை வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தந்த பெருமை அறிவழகன் ஒருவருக்கே உரித்தாகும்.
அண்மையில் இவர் இயற்றிய தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் பல சர்ச்சைகளை கிளப்பி நல்ல பெயரை மீண்டும் இவருக்கு பெற்று தந்தது. தற்போது ஆதி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகி உள்ளது.
இப்படத்துக்கு “சப்தம்” என பெயரிடப்பட்டுள்ளது. தமன் இசையில் விவேகா அனைத்து பாடல்களையும் எழுதுகிறார்.