“குலேபகாவலி” படத்தில் இடம் பெற்ற “குலேபா” பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனவர் பாடலாசிரியர் கு. கார்த்திக். ரெமோ படத்தில் இடம் பெறும் “டாவியா” பாடலின் மூலம் அறிமுகம் ஆகி இருந்தாலும், குலேபா பாடல் தான் அவரை பிரபலம் ஆக்கியது.

அதன் பிறகு விவேக் மெர்வின் இசையில் வெளியான “ஓரசாத” பாடல் அனைவரின் உள்ளதையும் கொள்ளை கொண்டு கார்த்திக் ஐ இன்னும் மக்கள் நெஞ்சில் அமர வைத்தது.

அதன் பிறகு நெவர் லூகிங் பேக் என்பது போல இவர் எழுதும் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். அதிலும் இவருக்கு தரமான வாய்ப்புகள் அணி வகுக்க துவங்கின. பேட்ட, பட்டாஸ், பீஸ்ட் என தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு இவரை தேடி வந்து அந்த பாடல்கள் இன்னும் இவரை பிரபலம் ஆக்கின.

சமீபத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்து ஒரு தனிப்பாடலை இயக்கி அதிலும் வெற்றி கண்டார். தற்போது இவர் இசையமைப்பாளர் ஆக அறிமுகம் ஆகிறார் “அங்காரகன்” என்ற படத்தின் மூலம். இந்த படத்தை ஒரு அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இதில் சத்யராஜ் லீட் ரோலில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை அமைப்பாளராக அடி எடுத்து வைக்கும் பாடலாசியர் கு. கார்த்திக் அவர்களுக்கு திரை துறையை சேர்ந்த அனைவரும் மற்றும் ரசிகர்களும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
