தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இரட்டை வேடங்கள் போடுவது என்பது திமுகவினருக்கு இயல்பானது.பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தமிழகம் அமைதிப்பூங்கா என்று, தொட்டிலையும் ஆட்டி வைக்கும் இரட்டை வேடம் திமுகவிற்கு கைவந்த கலை என்று தெரிவித்துள்ளார்.ஹிந்தி தெரியாது போடா’ என்று முதல் அமைச்சரின்; மகன் டி- ஷர்ட் கலாசாரத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் துவங்கி வைக்க,விமான நிலையத்தில் என்னிடம் ஹிந்தியில் பேசினார்கள் என்று முதல் அமைச்சரின் தங்கை, திமுகவின் எம்பி ஒரு பொய்யான புகாரை வழங்கி,வட மாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தைத் துவங்கி வைத்தார். தற்போது சமூகங்களில் உலவும் பல பொய்யான செய்திகளுக்கும் இவையெல்லாம் காரணங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.வட மாநிலத்தவர் தொடர்பான பிரச்னையை திசை திருப்ப இப்போது என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பூரில் விரும்பத்தகாத சம்பவம் நடந்த போது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?. பிரிவினையில்லாத நல்லிணக்கத்தை நாட்டுப்பற்றுடன் கூடிய தேச ஒற்றுமையை பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தும். என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More