நாடு முழுவதும் இரண்டாவது முறையாக ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 50 ஆயிரம்; கோடி ரூபாயை கடந்துள்ளதாகவும் தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 25 சதவிகிதம் அதிகரித்து 9 ஆயிரத்து 540 கோடி ரூபாயாக ஆகவும், புதுச்சேரியில் வசூல் 34 சதவிகிதம் அதிகரித்து 204 கோடி ரூபாயாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நுடப்பாண்டு அக்டோபர்; மாதம் வசூலான மொத்த ஜிஎஸ்டி ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடி ரூபாய் ஆகும்,
இதில் மத்திய ஜிஎஸ் 26 ஆயிரத்து 39 கோடி ரூபாய் ஆகும்.
மாநில ஜிஎஸ்டி 33 ஆயிரத்து 396 கோடி ரூபாய் ஆகும்,
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான 37 ஆயிரத்து 297 கோடி ரூபாயையும் சேர்த்து 81 ஆயிரத்து 778 கோடி ரூபாய் ஆகும்.
செஸ்சில் சரக்கு இறக்குமதி மூலம் வசூலான 825 கோடி ரூபாயையும் சேர்த்து 10 ஆயிரத்து 505 கோடி ருபாய் ஆகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது