தமிழக காவல்துறையில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் மாதத்திற்கு 6 முதல் 10 நாட்கள் வரை இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இரவு ரோந்து பணிக்கு செல்லும் அனைத்து இரண்டாம் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு சிறப்பு படியாக மாதம் 300 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்காக 42 கோடியே 22 ஆயிரத்து 800 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More