மூன்று ராணுவ வீரர்களோடு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா ராணுவத்துக்கு சொந்தமான மில் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் ஒன்று, அண்டை நாடான நைஜரின் தலைநகர் நியாமிக்கு புறப்பட்டு சென்றுள்ளது. நியாமியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்க முயற்சி செய்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது.
அதை தொடர்ந்து ஹெலிகாப்டர் விமான நிலையத்துக்குள் விழுந்து தரையில் மோதிய வேகத்தில் ஹெலிகாப்டரில் மளமளவென தீப்பிடித்தது.
இதையடுத்து விமான நிலையத்தில் தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை உடனடியாக அணைத்தனர். ஆனாலும், இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த மூன்று ராணுவ வீரர்களும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.