கடந்த மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, கேரள எம்.பி இளமாறன் கரீம் கடிதம் எழுதியிருந்தார். அதில், “நாட்டில் இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் அமர்ந்து செல்லும் வகையில் சட்ட திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் கீழ், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை ஏற்றிச் செல்ல முடியாது. உலகம் முழுவதும் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் இரண்டு பேர் பயணிக்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர் தவிர்த்து ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை அதில் ஏற்றிச் செல்ல அனுமதிப்பது புத்திசாலித்தனமாக இருக்காது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More