இரண்டு நாள் வீழ்ச்சிக்கு பின்னர் வார இறுதி வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலை 9.28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 29 புள்ளி நான்கு பூஜ்ஜியம் ஏற்றத்துடன் 60 ஆயிரத்து 865 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி பூஜ்ஜியம் புள்ளி ஏழு பூஜ்ஜியம் புள்ளிகள் உயர்வுடன் 18 ஆயிரத்து 53 ஆக இருந்தது.
இந்நிலையில், பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 950 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 64 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 117 ஆக இருந்தது.
உலகளாவிய மந்தமான சந்தைப் போக்கு, பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு போன்ற காரணங்கள் இருந்த போதிலும், காலை வர்த்தகம் நேர்மறை போக்குடனேயே தொடங்கியது. வர்த்தக நேரத்தின்போது ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பயணித்த சந்தைப் போக்கு வர்த்தக நேர இறுதியில் ஏற்றத்துடனேயே நிறைவடைந்தது. எஃப்ஐஐயின் தொடர்ந்த முதலீடு, ஆசிய, ஐரோப்பிய சந்தைகளின் நேர்மறை போக்கு இந்திய சந்தையின் ஏற்றத்திற்கு உதவின.
இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல்ஸ், அட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், விப்ரோ பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. மறுமுனையில், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் இன்ஃபேசிஸ், ஹிந்துஸ்தான் லீவர், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை வீழ்ச்சி கண்டன.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More