கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் இரு வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. வழக்கை சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்றக்கோரிய தாயார் மனுவுக்கு பதிலளிக்க போலீசுக்கு உயர்நீதிமன்றம்; ஆணையிட்டது. மாணவியின் செல்போனை ஆய்வு செய்த தடயவியல் துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை கூறியது. இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தற்போதைய நிலையே நீடிக்கக்கோரிய பெற்றோர் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

பேரிடர் மேலாண்மைத் திட்ட கொள்கை அம்சங்கள்:முதலமைச்சர் வெளியிட்டார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெள்ளம், சுனாமி, சூறாவளி, வறட்சி, வெப்பக்காற்று,...
Read More