Mnadu News

இலங்கையில் ரூ.3,200 கோடி முதலீடு செய்கிறது சீன அரசு.

அன்னிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த இலங்கை, அதில் இருந்து மீண்டு வர முயற்சித்து வருகிறது. இதற்காக பெரிய அளவிலான வெளிநாட்டு முதலீடுகளை இலங்கை அரசு எதிர்பார்த்து காத்திருக்கிறது.இந்த நேரத்தில், இலங்கையில் மிகப் பெரிய முதலீட்டை செய்ய உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில், 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான மிக பிரமாண்ட சரக்கு போக்குவரத்து முனையத்தை சீன அரசு அமைக்க உள்ளது.சீன அரசுக்கு சொந்தமான, ‘சீனா வணிகர்கள் குழு’ என்ற நிறுவனம் இந்த திட்டத்தை நிறைவேற்ற உள்ளது. வரும் 2025ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட உள்ள இந்த முனையத்தின் 70 சதவீத பங்குகள் சீன அரசு வசம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends