சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டார். அவர் வகித்து வந்த சட்டத் துறை அமைச்சர் பதவி அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு வழங்கப்பட்டது. புவி அறிவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட கிரண் ரிஜிஜு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜுவிடம், எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனம் குறித்து; கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், எதிர்க்கட்சிகள் நிச்சயமாக என்னை விமர்சிக்கத்தான் செய்வார்கள். எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராக பேசுவது ஒன்றும் புதிதல்ல. இந்த மாற்றம் தண்டனையல்ல. இது அரசின் திட்டம். பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More