Mnadu News

இல்லத்தரசி பணியை கணவரின் பணியோடு ஒப்பிட இயலாது: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.

சொத்துக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருவாய் ஈட்டி கணவர் தன்பங்கை வழங்கினால் குடும்பத்தை கவனித்து தனது பங்களிப்பை மனைவி வழங்குகிறார். எனவே, கணவர் வாங்கும் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு உள்ளது.குழந்தைகளை கவனிப்பது, குடும்ப நிர்வாகம் என இல்லத்தரசிகள் பார்ப்பது 24 மணி நேர பணி. இல்லத்தரசிகளின் பணியை கணவரது 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது. குடும்பத்தை மனைவி கவனிப்பதால்தான் கணவரால் தனது பணியை செய்ய முடிகிறது என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அத்துடன் வெளிநாட்டில் வேலைசெய்து வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை என தொடர்ந்த வழக்கையும் அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Share this post with your friends