உத்தரகண்ட் மாநிலம் ரோஸ்கர் மேளாவில், காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ், கடந்த சில தினங்களுக்கு முன், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி நியமன கடிதம் வழங்கியது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட பா.ஜ., ஆளும் அனைத்து இடங்களிலும் இது போன்ற பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன. உத்தரகாண்ட் இளைஞர்களின் வளர்ச்சிக்கு பா.ஜ., முயற்சி எடுத்து வருகிறது. இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். ஒவ்வொரு இளைஞர்களும் தங்கள் ஆர்வங்கள் மற்றும் திறன்களின் அடிப்படையில் புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் முன்னேறுவதற்கான வழிகளை உறுதிசெய்வது எங்களின் முயற்சியாகும்.வேலைவாய்ப்பிற்காக இளைஞர்கள் தொலைதூர இடங்களுக்கு பயணம் செய்வதை எளிதாக்கும் வகையில், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். என்று அவர் பேசினார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...
Read More