நாட்டு மக்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதைக் குறைக்கும் வகையில் நியூசிலாந்து அரசு தனது நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. புதிய மசோதாவின்படி இளைஞர்கள் புகைப்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா 2009ஆம் ஆண்டு ஜனவரி 1 அல்லது அதற்கு மேல் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்யக்கூடாது எனக் கூறுகிறது.
புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும் இளம் வயதினரைக் கட்டுப்படுத்தும் வகையில், சிகரெட் வாங்க வயது வரம்பை நிர்ணயித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்குள் புகைப்பழக்கமில்லாத நாடாக நியூசிலாந்தை உருவாக்கும் இலக்குடன் இந்த திட்டம் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா சில்லறை விற்பனையில் சிகரெட் புழக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என்றும், தலைமுறை மாற்றத்தை உருவாக்கும் என்றும், இளைஞர்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் என்றும் நியூசிலாந்ந்து சுகாதாரத் துறை கூடுதல் அமைச்சர் ஆயிஷா வர்ரால் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 13 வயதுக்குட்ட 40 மில்லியன் சிறுவர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More