Mnadu News

இஸ்ரோவின் செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி.

திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இன்ஜினின் பல்வேறு கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன.தற்போது இந்தியாவில் முதன்முறையாக காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், செமி கிரையோஜினிக் இன்ஜினின் ஒருங்கிணைந்த இயந்திரம் மற்றும் நிலை சோதனை வசதியில், 2 ஆயிரம் கே.என்., உந்துதல் கொண்ட செமி கிரியோஜெனிக் இயந்திரத்தின் திரவ ஆக்சிஜன், -மண்ணெண்ணெய் உந்துவிசை கலவையை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்ட சோதனையானது, 15 மணி நேரம் நீடித்து வெற்றி பெற்றுள்ளது.இச்சோதனை இஸ்ரோவின் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

Share this post with your friends