தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் லாஸ் லோபோஸ் என்ற பயங்கரவாத அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் படுகொலைகளில் ஈடுபடும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், ஈகுவிடரின் இரண்டாவது பெரிய பயங்கரவாத அமைப்பாக விளங்குகிறது.

2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறை கைதிகள் “லாஸ் லோபோஸ்” அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அரசுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இருக்கும் இந்த அமைப்பை ஒடுக்க அரசு தீவிரம் காட்டி வந்தது.

இந்தநிலையில், எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் “லாஸ் லோபோஸ்” அமைப்பை சேர்ந்தவர்கள் சுற்றி திரிவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈகுவடார் போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கொலம்பியா எல்லையில் பதுங்கி இருந்த அந்த அமைப்பின் தலைவர் லா போகாவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த அமைப்பை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு படிப்படியாக இந்த பயங்கரவாத அமைப்பு ஒடுக்கப்படும் என கூறப்படுகிறது.
