Mnadu News

ஈரானில் தொடரும் போராட்டம் துப்பாக்கிச் சூடு! பரபரப்பான சூழலில் நகரம்!

ஈரானில் ஹிஜாப் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த போராட்டங்களில் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தியதாக ஒருவருக்கு மரண தண்டனை விதித்தது ஈரான் நீதிமன்றம்.

ஈரானின் தென்மேற்கு நகரமான இசே நகரில் உள்ள பஜாரில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுமார் 6 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உள்பட 10 பேர் காயமடைந்தததாகவும் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த போராட்டம் எதன் தொடர்புடையது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது ஈரான் காவல் துறை.

இந்த நிலையில், நேற்று மதியம் இசே நகரின் பல்வேறு பகுதிகளில் கூடிய ஹிஜாபிற்கு எதிரான போராட்டக்காரர்கள் ஈரான் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி காவல்துறையினர் மீது அவர்கள் கற்களை வீசினர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. இந்த நிலையில் சென்ற மாதம் இதே போன்ற ஒரு துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends