தேமுதிக நிர்வாகி ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கும்பகோணத்திற்கு வருகை தந்த எல்.கே.சுதீஷ், திருமணத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், வேட்பாளர்கள் பட்டியலில் எங்கள் கட்சியின் வேட்பாளர் பெயர் முதலில் உள்ளது. இதன்மூலம் எங்கள் கட்சியின் சின்னம்தான் முதலில் உள்ளது. இது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி. அந்த வகையில், இந்த இடைத் தேர்தல் தேமுதிகவுக்கு திருப்புமுனையாக அமையும்” எனத் தெரிவித்தார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More