ஈரோடு கிழக்குத் தொகுதியில் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து வீடுவீடாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நட்சத்திர பிரசாரங்களின் காரணமாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணியையொட்டி 2 கம்பெனி மத்தியப் படை வீரர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வந்துள்ளனர். மேலும் கூடுதலாக 3 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக அமர்த்தப்படுவர் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More