இடைத்தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 24 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்பட 62 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இடைத்தேர்தலையொட்டி கட்சிகள் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். ,வருகிற 24 ஆம் தேதி முதல் அமைச்சர்; ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வார் என திமுக அறிவித்துள்ளது.அதுபோல, வருகிற 19 ஆம் தேதியன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More