Mnadu News

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்புக்கு தடை.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு கடந்த 31ம் தேதி துவங்கி பிப்.,7ல் முடிவடைந்தது. வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை (10ம் தேதி) கடைசி நாளாகும்.மார்ச் 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.இத்தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை பிப்.,16 முதல் 27ம் தேதி வரை வெளியிட அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Share this post with your friends