Mnadu News

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது.அதே வேளையில், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.இடைத்தேர்தலில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு பொதுவாக அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி, 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, மாலை 6 மணியுடன், வாக்குப்பதிவுக்கான நேரம் முடிந்துவிட்டது. ஆனாலும் மாலை 5.30 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, அவர்கள் மட்டும் வாக்களிக்க தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
முன்னதாக, இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, வாக்காளர்கள் தங்களது வேட்பாளர்களை 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தேடி வாக்களிக்க கால தாமதம் ஆனதால், சில வாக்குச்சாவடிகளில் கூட்டம் அலைமோதும் நிலையும், ஒரு மணி நேரத்துக்கு மேல் வரிசையில் நின்று வாக்களிக்கும் நிலையும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More