Mnadu News

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல: 77 வேட்பாளர்கள் போட்டி.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கி கடந்த 7 ஆம் தேதி முடிவடைந்தது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டரங்கில் தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் க.சிவகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் வேட்புமனுக்களை பரிசீலித்து நிலையை அறிவித்தனர்.அதன்படி மொத்தம் 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் பரிசீலனையின்போது 13 பேரின் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 83 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. அதில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் உள்பட 6 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். தற்போது வரை மொத்தம் 77 பேர் போட்டியில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடக்க உள்ளது.

Share this post with your friends