ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் பெற்று 66 ஆயிரத்து 575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43 ஆpயரத்து 981 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2 வது இடம் பெற்றார். அதோடு, நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 9 ஆயிரத்து 552 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் ஆயிரத்து 301 வாக்குகள் பெற்று நான்காவதாக வந்தார். இந்த இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் உட்பட 75 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More